June 3, 2020
தண்டோரா குழு
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முகத்தை மூடியபடி backward brain எனும் விநோத மிதி வண்டியை ஓட்டி சாதனை முயற்சியில் ஈடுபட்டு வரும் சாதனை மனிதர்.
கின்னஸ் சாதனை உட்பட 9 வெவ்வேறு உலக சாதனைகளை செய்தவர் கின்னஸ் குமார் என்ற இன்ஸ்பயர் குமார். பென்னி ஃபார்த்திங் உட்பட பல்வேறு வகை நூதன மிதிவண்டிகளை பல கிலோ மீட்டர்கள் ஓட்டி சாதனை செய்த இவர், ஒரு பிசியோதெரபிஸ்ட், சுகாதார பராமரிப்பு திட்ட மேலாளர் மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் ஜூன் 3 ந்தேதி உலக சைக்கிள் தினம் அனுசரிக்கபடுவதை முன்னிட்டு, . முகத்தில் ஒரு கருப்பு முகமூடியைப் பயன்படுத்தி Backwards brain மிதிவண்டியை ஓட்டி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இதுவரை Backwards brain சைக்கிளில் இது போன்று யாரும் செய்யாத நிலையில் இவரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பேசிய கின்னஸ் குமார்,
பென்னி ஃபார்த்திங் சைக்கிளில் பர கிலோ மீட்டர் ஓட்டியது,மற்றும் backward brain சைக்கிளை ஓட்டி முன்னரே பல சாதனைகளை செய்துள்ளதாகவும்,மேலும் ஒரே நேரத்தில் கைகளை வலது மற்றும் இடது கைகளை சுற்றுவது என சாதனைகளை தொடர்ந்து தற்போது முகத்தை மூடியபடி இந்த மிதி வண்டியை ஓட்டியுள்ளதாகவும், விரைவில். இந்த சாதனையும் அங்கீகரிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து அவர்,உலக சைக்கிள் நாளில், நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் போன்ற வாழ்க்கை முறை நோய்களை தடுப்பதற்கு தினமும் சைக்கிள் பயிற்சி செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.