• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மதராசாவில் புகுந்து மர்ம நபர்கள் அட்டூலியம் நள்ளிரவில் பொருட்களை சேதப்படுத்தி சென்றதால் பரபரப்பு

June 3, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே குரான் பயிலும் மதராசாவில் நுழைந்து மர்ம நபர்கள், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் இஸ்லாமிய குழந்தைகள் குரான் பயிலும் மதராசா செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக மதராசா மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று இரவு அப்பள்ளியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. மேலும் லைட்டுகளும் போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதராசாவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த குரான் புத்தங்களை சேதப்படுத்தி தப்பி சென்றது தெரியவந்தது.

IMG-20200525-WA0096

இதையடுத்து அப்பகுதி மக்கள் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த போலீஸார் தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத்தினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது,

மதராசாவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது யார் என தெரியாது, இதற்கு எந்த மதச்சாயமும் பூச வேண்டாம், ஆனால் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இந்த மாதிரியான வழக்குகளில் கோவை மாவட்ட போலீஸார் சிறப்பாக விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே இந்த வழக்கிலும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க