June 2, 2020
தண்டோரா குழு
கொரோனா காலத்தில் பள்ளி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வற்புறுத்தி வருகிறது. பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக சொல்லி குழந்தைகளை அலைக்கரிக்கிறது. அதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கும் உரிய சம்பளம் வழங்குவதில்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதனால் சிறு வயது பள்ளி குழந்தைகளுக்கும் மன அழுத்தமானது அதிகரிக்கிறது.
அதேசமயம் சம்பளம் வழங்காததால் ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.