June 2, 2020
தண்டோரா குழு
மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி நாராயணசாமி விவசாயி சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இலவச மின்சார உரிமை பாதுகாப்புக்கான கூட்டியக்கம் மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரியும், இலவச மின்சார உரிமையை காத்திடவும், தக்கல் முறையில் மின் இணைப்பினை பெறுவதற்கும் ஒரு குதிரை திறனுக்கு 20,000 ரூபாய் வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யவும், கட்டணம் இல்லாமல் பெரும் வகையில் வரைமுறை படுத்தவும், வேளாண் மின்சார இணைப்பு வேண்டி,ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு இலவச மின்சார உரிமை வழங்க வேண்டும் என்றனர்.