• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்களை வியாபாரம் நடத்த விடுங்கள் மன்றாடும் கோவை காய்கறி வியாபாரிகள்

June 2, 2020 தண்டோரா குழு

வியாபாரம் நடத்தாமல் வாழ்வாதாரம் முடங்கி கிடப்பதாகவும், மாநகராட்சி கொடுக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வியாபாரம் செய்யப்படும் என்றும், தொழில் நடத்த அனுமதி வேண்டும் என்றும் கோரி கோவை டி.கே மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை பெரியகடை வீதி பகுதியில் தியாகி குமரன் மார்க்கட் கடந்த 1930ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 450 கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் இதில் 50 கடைகள் மட்டுமே திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மற்ற வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். அனைத்து கடைகளை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மற்றும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கடந்த 65 நாட்களாக எங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.இந்த சூழலில் 50 கடைகள் மட்டும் திறந்தால் எங்கள் ஒற்றுமை சீர்குலையும். இங்குள்ள அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும். மாநகராட்சி கொடுடுக்கும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடித்து தொழில் நடத்துவோம். எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

மேலும் படிக்க