• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ஐடி ஜோடி

June 1, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கி தம்பதியினர்
எளிய முறையில் திருமணம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி.கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூர் எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்.இருவரும் பெங் களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு பெற்றோர் சம்மத த்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி இன்று காலை சூலூரை அடுத்துள்ள சோமனூர் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி பகுதியில் உறவினர்கள் 50 பேர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் திருமணம் நடைபெற்றது.இதில் பியூட்டி என்னவென்றால் தங்களது திருமணத்தை முன்னிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்கள் 450 பேருக்கு அரிசி,மளிகை சாமான்கள் வழங்கியது தான்.

இதுகுறித்து மணமகன் ரஞ்சித் கூறுகையில்,

ஆடம்பரமாக திருமணம் நடத்த நினைத்திருந்ததாகவும்,கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும்,அதில் தனக்கு மன திருப்தியை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்,இனி வரும் காலங்களில் ஆடம்பரமாக திருமணம் செய்வதை தவிர்த்து இது போன்ற ஏழை,எளிய மக்களுக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆடம்பரமாக திருமணம் செய்வதை தவிர்த்து எளிய முறையில் திருமணம் செய்தது மட்டுமல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஐடி ஜோடியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க