June 1, 2020
தண்டோரா குழு
நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் akp சின்னராஜுக்கு மிரட்டல் விடுத்த சட் டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மேற்குமண்டல காவல்துறைதலைவர் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளா akp சின்னராஜ் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் ஆதரவாளர்கள் 20 க்கும் மேற்பட்டோர் சின்னராஜ் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிகிறது. மேலும் இனி ஆய்வு என கூறிக்கொண்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குள் வந்தால் கொலை செய்து விடுவதாக akp சின்னராஜ்க்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மேற்குமண்டல காவல்துறை தலைவரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கட்சி அறிவிக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாவோம் என்றும் மனு அளிக்க வந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.