May 31, 2020
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், மணி என்பவர் பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று இரவு திடீரென பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.