• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முடிதிருத்துமிடங்கள் அழகு நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன ? – கோவை மாநகராட்சி

May 30, 2020 தண்டோரா குழு

முடிதிருத்துமிடங்கள் அழகு நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது கோவை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

சளி, காய்ச்சல், இருமல், தொண்டைவலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது.

நோய் தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மேற்படி அறிகுறிகள் இருப்பின் பணி மேற்கொள்ள கூடாது.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணுடன் கூடிய வருகை பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைவும் முன் கைகளை கழுவ கிருமிநாசினி விநியோகிக்க வேண்டும்.

பணியாளர்கள் முகக்கவசம், தலையுறை மற்றும் மேல் அங்கி (யுpசழn) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மேலிடுவதற்கு தங்களது சொந்த பொறுப்பில் துண்டுஃ வெள்ளை வேட்டி போன்ற துணிகளை கொண்டுவர அறிவுறுத்த வேண்டும்.

இரு நபர்களுக்கு ஒரே துணிகளை பயன்படுத்தக் கூடாது.

மேலிடப்படும் துணிக்கு மேல் நேர்த்தியாக வெட்டப்பட்ட காகிதத்தாள் போட வேண்டும்.

முடிவெட்ட பயன்படுத்தும் கத்தி, கத்தரிக்கோல், சீப்பு, உள்ளிட்ட கருவிகளை 7மூ லைசால்ஃடெட்டால்ஃ சேவ்லான் (1-லிட்டர் தண்ணீரில் 15 மி.லி.) கரைசலில் 30 நிமிடம் போட்டு பின்பு பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றால்போல் தேவையான எண்ணிக்கையில் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபருக்கும் முடிவெட்டிய பின்பு நாற்காலிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வெட்டப்படும் முடி, சோப்பு நுரை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

தரை மற்றும் கைப்பிடி, கதவு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய 1மூ சோடியம் குளோரேட் கரைசலை கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது ஐந்து முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

பணியாளர்கள் ஒவ்வொரு நபருக்கும் முடிதிருத்தம் செய்த பின்பு கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை அல்லது தொலைபேசி மூலம் பதிவு செய்யும் முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் இடும் பட்சத்தில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பராமரிக்க வேண்டும்.

கதவு மற்றும் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் (ளுஉசநநn) போன்றவற்றை போடக்கூடாது.
குளிர்சாதன வசதி பயன்படுத்தக் கூடாது.

பயன்படுத்திய பிளேடு மற்றும் இதர கழிவுகளை தனியாக பிரத்யேக பைகளில் சேகரித்து கட்டி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் யாருக்கேனும் நோய் தொற்று அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தெளிவுப்படுத்திக் கொள்ள அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி 24 மணிநேர நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறை எண்.0422-2302323 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க