• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவிலில் பன்றி இறைச்சியை வீசி சென்ற நபர் கைது

May 29, 2020 தண்டோரா குழு

கோவையில் பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற ஹரி என்பரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர். இந்நிலையில் காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிகட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை பார்த்து வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இந்துத்துவ அமைப்பினரும் கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். கோவில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஒரே குற்றவாளி ஹரி என்பவர் கோவை மாநகர காவல் துறையினரால் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க