May 28, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 710.பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 117. சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 559. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில்
மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது.

இன்றும் ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 145 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்று மட்டும் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,548 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.