May 28, 2020
தண்டோரா குழு
கோவையில் கலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அக்கினி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் இன்று காலை முதலே சுட்டரித்த வெயில் மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தொடர்ந்து தற்போது, கோவையில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மாநகரப் பகுதிகளில் காந்திபுரம் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சாய்பாபா காலனி,பீளமேடு, துடியலூர் மற்றும் உக்கடம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. வானிலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் கோவையில் தற்போது இந்த மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.