May 27, 2020
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்திய நிலையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்குதல் சென்னையில் தொட்ர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முற்றிலுமாக குறைந்துள்ளது.தாக்கத்தை தடுப்பு வகையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவையின் மையப்பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் மீண்டும் அப்பகுதி மக்கள் நடைபயணங்களை துவங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் பொது வெளிகளில் உலாவுகின்றனர்.மாவட்ட ஆட்சியர் கேம்ப் ஆபிஸ்,காவல் உயர் அதிகாரிகள், நீதிபதிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியிலேயே பொதுமக்கள் அரசு உத்தரவை மீறி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.