• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமண அழைப்பிதழில் எல்சிடி திரை முன்னாள் அமைச்சரின் ஆடம்பரம்

October 20, 2016 தண்டோரா குழு

ஒரு குடும்பத்தில் திருமணம், காது குத்து என இதர விசேஷங்களுக்கு பத்திரிகை அடித்து உறவினர்களை அழைப்பது நம் வழக்கம்.பண்டைய காலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை அவரவர் தங்கள் வசதிக்கு ஏற்ப பல வண்ணங்களில் பத்திரிகை அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி வியப்பான வகையில் திருமண அழைப்பிதழை வெளியிட்டுள்ளார். பார்ப்போர் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் எல்.சி.டி. திரையில் வரவேற்கும் விதத்தில் திருமணப் பத்திரிகைகளை வடிவமைத்திருக்கிறார். தற்போது அந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் உலாவி வருகிறது.

கர்நாடக அரசில் எடியூரப்பா அரசில் அமைச்சராக இருந்தவர் கலி ஜனார்த்தன் ரெட்டி. சுரங்க தொழிலில் கோடிகளில் லாபம் சம்பாதித்து வருகிறார். இவர் தனது மகள் ப்ராமினி திருமணத்திற்காக தயாரித்துள்ள திருமண அழைப்பிதழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சாதாரணமாக திருமணத்திற்கு அளிக்கப்படும் அழைப்பிதழில் மணமகள் – மணமகன் பெயர்களும் திருமணம் நடைபெறும் இடமும் இடம்பெறும். சில சமயம் உறவினர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஜானர்த்தன் தனது மகளுக்காக வழக்கமான வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், ஒரு பெரிய பெட்டி வடிவில் உருவாகியுள்ளார்.
திருமண பத்திரிகையைத் (பெட்டி) திறந்து பார்த்தால், ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைக்கும் ஒரு வீடியோ எல்.சி.டி. திரையில் தானாகவே ஓடுவது போல அமைத்துள்ளனர். திருமணத்துக்காகவே சிறப்பாக ஒரு நிமிட விடியோவைத் தயாரித்துள்ளனர். அந்த வீடியோவில் ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டுப் பாடிக்கொண்டு தனது மகளை அறிமுகப்படுத்துகிறார்.

பின்னர், மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜீவ் ரெட்டியும் “டூயட்” பாடுகிறார்கள். கடைசியாக, திருமண தேதி, இடம் ஆகியவற்றை, ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடைகிறது.

இந்தப் பாடலைப் படப்பிடிப்பு செய்வதற்காகத் தனியாக செட் போட்டு தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

வரும் நவம்பர் 16-ம் தேதி நடக்கவுள்ள இந்த திருமண விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலரது நிகழ்சிகள் உள்ளதாம். திருமண அழைப்பிதழே இவ்வளவு ஆடம்பரம் என்றால் திருமணம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லவே வேண்டாம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கலி ஜனார்த்தன் ரெட்டி, சட்டவிரோதச் சுரங்க வழக்கில் கைதாகி மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க