May 27, 2020
கோவை பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 18 க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த சூழ்நிலையில் அதில் ஒரு பகுதியான கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் ஜடாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பூ மார்க்கெட் பகுதி எப்பொழுதும் வியாபாரிகளும் பொதுமக்களும் நிறைந்த பகுதியாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த பூக்கள் விற்கும் இடமாகும். இதனால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா?
அனைத்து பணிகளும் சரியான முறையில் இயங்குகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,
ஏற்கனவே இந்த பகுதி ரெட் ஜூனுக்குள் உள்ளது.இதனால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் சமூக இடைவெளி கடைபிடிக்க படாததால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது.எனவே கோவையிலும் இதுபோன்று நடக்காமல் இருக்க தற்போது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். இதற்கு முன்னர் இந்த பகுதியில் பூக்களை விற்பதற்காக தனியாக கடையில் அமைத்துக்கொடுக்கப்பட்டது தற்போது இந்த பகுதியின் வரைபடங்களை எடுத்து ஆராய்ந்து நல்ல முறையில் சமூக இடைவெளியுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதன் முதற்கட்டமாக தான் தற்போது இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் என்றார்.