May 26, 2020
தண்டோரா குழு
கோவையில் இந்து முன்னணியினர் கோயில்கள் முன்பாக கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்துள்ள சூழ்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கு தொடர்கிறது. இதன் பொருட்டு ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. மேலும் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில்,தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கோயில்கள் முன்பாக கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கோனியம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியைச் சேர்ந்த குணா தலைமை வகித்தார். பத்துக்கும் மேற்பட்டோர் தோப்புக்கரணம் போட்டு அரசுக்கு தங்கள் கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவித்தனர் மேலும் முருகன் வேடமிட்ட சிறுவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.