May 24, 2020
தண்டோரா குழு
கோவையில் தடையை மீறி செயல்பட்டு வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பெரிய ஜவுளி கடைகள் திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து கோவையில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து கள்ளத்தனமாக விற்பனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் திடீரென கோவை வடக்கு மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் தடையை மீறி மறைமுகமாக விற்பனை நடைபெற்று வந்த 10க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தார். ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி விற்பனை செய்து வந்த பிரபல ஜவுளி கடைகளை பூட்டி சீல் வைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.