May 23, 2020
தண்டோரா குழு
கோவை காளாம்பாளையம் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால், பிடிக்க சென்ற போலீஸை தாக்கிய வாலிபரை பேரூர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை காளாம்பாளையம் அருகே உள்ள செட்டியார் தோட்டம் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் தகராறு செய்வதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் அடிப்படையில், பேரூர் போலீஸ் ராகவேந்திரன் அங்கு விசாரணை சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திலீப்(38) என்ற வாலிபர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருந்தார். இதை கண்ட ராகவேந்திரா திலீப்பை பிடிக்க முயன்றார். அப்போது அவரை ஒறுமையில் பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து ராகவேந்திர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். பின் அங்கு வந்த சக போலீஸார் திலீப்பை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.