May 22, 2020
தண்டோரா குழு
சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் பம்புசெட்டுகளை மானியத்துடன் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
வேளாண்மை பொறியியல் துறை மூலம் கோவை மாவட்டத்தில் 2020 – 21 நிதியாண்டில் சூரிய சக்தியுடன் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 70 % சதவிகிதம் அரசு மானியத்துடனும்,30 % விவசாயிகள் பங்களிப்புத் தொகையுடனும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற உள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையின் கோவை வருவாய் கோட்டத்திற்குட்பட்டவர்கள் தடாகம் சாலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்டவர்கள் மீன்கரை சாலையில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினையும் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.