• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி

May 22, 2020 தண்டோரா குழு

நடன குழு சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது உலகெங்கும் பரவிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. அதன் மறுபக்கமாக கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பல்வேறு இடங்களில் நடன மற்றும் நாடக குழுவினர் மூலம் கொரோனா விழிப்புணர்வு நடன மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவையில் சிங்காநல்லூர், புளியகுளம், உக்கடம், காந்திப்பார்க், பூ மார்க்கெட், கணபதி, லட்சுமி மில்ஸ், காந்திபுரம், டவுன்ஹால், சிந்தாமணி ஆகிய 10 பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் இணைந்து கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையர் வைரஸ் தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடன மற்றும் நாடகங்களை மேற்கொண்டனர். நடனம் மற்றும் வேடிக்கை காட்சிகள் இணைந்து சுவாரசியமாக இருந்ததால் மக்களிடையே விழிப்புணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனை வாகனங்களில் வந்த மக்கள் அனைவரும் இறங்கி வந்து கண்டுகளித்தனர்.

காவல்துறையினரும் மக்களை சமூக இடைவெளி விட்டு நின்று கண்டு குறைக்கும்படி கேட்டுக் கொண்டனர். காவல்துறையினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளை மேற்கொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க