May 21, 2020
தண்டோரா குழு
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லால் தனது 60வது பிறந்தநாளை கோவையில் உள்ள முதியோர்கள் உடன் காணொளி காட்சி மூலம் கொண்டாடினார்.
நடிகர் மோகன்லால் தனது பெற்றோர்களின் நினைவாக விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதனிடையே இன்று நடிகர் மோகன்லால் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் வசித்து வரும் சுமார் 60-க்கும் மேற்பட்ட முதியோர்களை அவர் இன்று காணொலி காட்சி மூலம் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து அவர்களிடம் உரையாடிய அவர் தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற்றதோடு காணொளி மூலம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதோடு தனது அறக்கட்டளை சார்பில் முகக் கவசங்கள் மற்றும் ஹேண்ட் சேனிடைசர்களை அவர் வழங்கினார்.நடிகர் மோகன்லாலை காணொளி காட்சி மூலம் பார்த்தது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்ததாக அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.