May 21, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1முதல் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள்,1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என 84 செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2020-21 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்த கோவை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு பெற்றோர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என்றும் மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிக்கையை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ளார்.
(http://forms.gle/9caEWry7YaW679xG6)
9842951127, 9442075061
மாநகராட்சி கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பள்ளிகளில் தற்போது நிலவி வரும் கொரோனா தாக்குதலின் காரணமாக சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்