May 20, 2020
தண்டோரா குழு
மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. இதனால், விமான சேவை முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“நிலைமைக்கேற்ப மே 25, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும். தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் தனியாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.