May 20, 2020
தண்டோரா குழு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பு சார்பில் 73-வது கூட்டத்தொடர், காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.இதில் 194 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்,34 உறுப்பினர்களைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஹிரோகி நகதானி நிர்வாகக்குழுத் தலைவராக இருந்துவந்தார்.அவரது பதவிக்காலம் இந்தத் தற்போது முடிவடையும் சூழலில் அப்பதவிக்கு ஹர்ஷ்வர்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மே 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.