May 18, 2020
தண்டோரா குழு
மது போதையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய பெண் போலீஸ் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் அருகே தனியார் தோட்டத்தில் இரண்டு பேர் அமர்ந்து மது குடிப்பதாகவும், அப்பகுதியில் சாலையில் செல்வோரிடம் தகறாறு செய்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.
இந்நிலையில் போத்தனூர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது, அங்கு மது போதையில் இருந்த மதன்குமார் என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமாரை தறக்குறைவாக பேசி தாக்கி உள்ளார். இதையடுத்து மதன்குமார் கைது செய்த போலீஸார் அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் தாக்கிய நபர் கோவையில் பணியாற்றும் பெண் போலீஸில் கணவர் என்பதும், தனது நண்பர் உதயகுமாருடன் தோட்டத்தில் மது குடிக்க வந்ததும் தெரியவந்தது.