• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் 7 பேருந்துகள் இயக்கம் !

May 18, 2020 தண்டோரா குழு

ஊரடங்கு தளர்வினால் கோவை மாநகர பேருந்து நிலையங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் 7 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மே 31 வரை மத்திய அரசு நீட்டித்து உள்ளது. இதன் அடிப்படையில் மாநில அரசுகள் இதற்கு தகுந்தாற் போல் தளர்வுகள் ஏற்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு சகுஜமான நிலையில் இருந்து வருகிறது.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாநகர பகுதியில் பெருந்துகள் இயக்கபட்டு வருகிறது.கோவையில் அரசு பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஏழு பேருந்துகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது.

கோவை பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கருமத்தமரபட்டி, சூலூர்,கோவை மாநகரின் மூன்று பகுதிகள் என ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டன.இதன் நடவடிக்கையாக கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் நஞ்சப்பா சாலையிலுள்ள சிறைச்சாலை மைதானத்தில் செயல்படத் துவங்க உள்ளதாகவும்,இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் உக்கடம் லாரிப்பேட்டையில் செயல்படவுள்ளதாகவும்,மேற்கு மண்டலத்தற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த வியாபார கடைகள் தடாகம் சாலையிலுள்ள ஜி.சி.டி பொறியியல் கல்லூரி மைதானத்தில் செயல்படவுள்ளதாகவும்,மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரானோ காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு 50 சதவீத அரசு ஊழியர்கள் அவர்களது பணியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க