• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை தனிமைபடுத்தபட வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 16, 2020 தண்டோரா குழு

கேரளாவில் இருந்து பணிக்கு திரும்பும் ஊழியர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைபடுத்தபட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களை பணிக்கு அழைத்து வர கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து இருந்து கோவைக்கு ஊழியர் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் கேரளாவில் இருந்து ரயிலில் வரும் அனைத்து கேரள மாநிலத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கும் முழுமையான கொரோனா பரிசோதனை செய்து அவர்களை பதினைந்து நாட்கள் தனிமைபடுத்தி பின்னர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

கேரளாவில் இருந்து வருவதால் ரயில்வே ஊழியர்களுக்கு முழுபரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனவும், ஆனால் அதை செய்யும் திட்டத்தில் தமிழக அரசும், சேலம் ரயில்வே கோட்டமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வில்லை எனில் மீண்டும் கோவையில் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்,தமிழக அரசு இதில் தலையிட்டு கேரளாவில் கோவைக்கு வரும் ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் சோதனை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க