• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி மக்களே நீதி மய்யமாக மாறும் காலம் வந்துவிட்டது என்று கமல் டுவீட் !

May 15, 2020 தண்டோரா குழு

மே 4-ம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மூன்று நாட்கள் கடந்து மே 7-ம் தேதி அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையில், தனிமனித விலகலை கடைபிடிக்க வில்லை என மே17 ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் எனத் தெரிக்கிறது.

இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டுகிறது தமிழக அரசு. ஐகோர்ட்டில் பதிலளிக்க அவகாசம் கேட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டது. தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க