• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது கோவை!

May 13, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 145 பேரும் குணமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவையை பொறுத்த வரையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கனவே 141 குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.இதையடுத்து,கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.

எனினும், கரும்புகடையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு,கடந்த மூன்று தினங்களுக்கு முன் சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.எனினும் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை,என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்றால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த கர்ப்பிணி பெண்ணும் இன்று குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க