May 13, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு தடுப்புகள் அகற்றப்பட்டன.
கோவை மாநகர பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இதனால் அங்கிருந்து தடுப்புகள் அகற்றப்பட்டன. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணமடைந்து 15 நாட்களுக்குள் மேல் ஆகிறது. அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் தனிமைப்படுத்தப்பட்ட 22 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த பகுதியில் இருக்கும் கடைகள் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கோவை மாநகராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பகுதிகளில் கே.கே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு,போத்தனூர் ரயில்வே காலனி, சாய் நகர், திருமலை நகர், கருப்பராயன் கோவில் வீதி, சிட்கோ, கஸ்தூரி கார்டன் உள்ளிட்ட 28 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.அந்த இடங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் ஆனால் காரணமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெங்கடாபுரம் பாபா வீதி கோவை கார்டன், பி கே புதூர் பி.ஆர்.எஸ் பகுதி சிறைச்சாலை, சாரமேடு ராயல் நகர் உள்பட தனிமைப்படுத்தப்பட்ட 8 இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி சார்பில் கூறியுள்ளனர்.