May 12, 2020
தண்டோரா குழு
சோமனூரில் உள்ள கேசிஆர் மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பெண்களை வேலைப்பளுவை திணித்து நெருக்கடி ஏற்படுத்துவதாக ஏஐசிசிடியு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.தாமோதரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கோவை மாவட்டம் சோமனூரில் உள்ள கேசிஆர் டெக்ஸ்டைல் நிறுவனம் செயல்படுகிறது. இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்திலும் பழங்குடி பெண்களை 16 மணி நேரம் வரைஅனைவரும் பஞ்சாலை குள்ளேயே தங்கவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊதியத்தை மில் நிர்வாகம் தர மறுக்கிறது. அவர்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம் என்கிற விருப்பத்தையும் ஏற்க மறுக்கிறது.தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கேசிஆர் மில்லில் ஆய்வு செய்து நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.