May 12, 2020
தண்டோரா குழு
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.