• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7000ஐ தாண்டியது!

May 10, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 669 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள்.இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 509 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 47 பேருக்கும், செங்கல்பட்டில் 43 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 12,962 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள் 2,32,368.
தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,959 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,195 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க