May 9, 2020
தண்டோரா குழு
கோவையில் இரண்டாம் கட்டமாக சிட்கோ, சுந்தராபுரம் பகுதியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பட்டனர்.
கொரோனா ஊரடங்கால் வட மாநிலங்களில் இருந்து கோவையில் தங்கி பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று முதல் கட்டமாக சுமார் 1,149 வட மாநில தொழிலாளர்கள் இரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பட்டனர். இந்நிலையில் சிட்கோ ,ஈச்சனாரி, சுந்தராபுரம் பகுதிகளில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் நேற்று இரவு சுந்தராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அனைவரும் பாதுக்காப்பாக இரயில் நிலையம் அனுப்பட்டனர்.
காலை செல்லும் சிறப்பு இரயில் மூலம் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனிடையே உத்திரப்பிரதேச மாநிலம் செல்ல உள்ள தொழிலாளர்களுக்கு குறுச்செய்தி வந்துள்ளதை அடுத்து மூன்றாவது இரயில் செல்லும் பயணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.