• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தமிழகத்தில் 6,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு’

May 8, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 405 ஆண்கள் ,195 பெண்களுக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரானா பரிசோதனைக்கு 52 ஆய்வகங்கள் உள்ளன.இந்தியாவிலேயே அதிகபட்சம் 2 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெஸ்ட் செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை வசதிகள் தமிழகத்தில் உள்ளன.இன்று மட்டும் 13,980 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அதிக சோதனை நடத்தப்படுவதால்,பாதிப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் கண்டறியப்படுகிறது.
பாசிட்டிவ் என்றாலும்,தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட 80 சதவீத தொற்றாளர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சென்னையில் 2 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம் 0.68% ஆக உள்ளது.கொரோனா காலத்தில், வல்னரெபுல் ஆக இருக்கும் வயதில் மூத்தவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க