May 8, 2020
தண்டோரா குழு
கோவையில் பள்ளிவாசல்களில தொழுகை நடத்தவும், மதுபானக்கடைகளை மீண்டும் மூட உத்தரவிடக்கோரியும் செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினர்.
கொரானா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.ஆலயங்களை திறப்தற்கான உத்தரவு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த செல்வபுரம் அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பினர்,கோவையில் உள்ள மசூதிகளை திறக்கவும்,வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் திறக்கப்பட் டுள்ள மதுபானக்கடைகளை திரும்பவும் மூட மறுபரிசீலனை செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.