• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆதார் கார்டு கேட்காமல் மது குடுக்க சொல்லுங்க – கோவை மதுப்பிரியர்கள் வேண்டுகோள்

May 7, 2020 தண்டோரா குழு

ஆதார் கார்டு இல்லாமல் மது வழங்கக்கோரி மது பிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு போட்டிருந்தது. இதனால் டாஸ்மாக் கடைக்கு மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதிகாலை ஆறு மணிக்கே பூமார்க்கெட் அர்ச்சனா திரையரங்கம் அருகே காத்திருந்த மது பிரியர்கள் டோக்கனை வாங்கினர்.இந்நிலையில் காவல் துறையினர் வரைந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றவர்கள் , அதிலேயே உட்கார்ந்து இருந்தனர். ஒரு சில கட்டங்களில் செருப்பு, கல், தங்களது பை ஆகியவற்றை வைத்திருந்தனர். 44 நாட்கள் கழித்து மதுபான கடை திறக்கப்பட்டதாகவும், அரசு ஆதார் கார்டை கேட்காமல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள்தெரிவித்தனர். ஆதார் கார்டு இல்லாமல் மது கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கோவை கிட்டாம்பாளையம் பகுதியிலுள்ள மதுபான கடையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் மக்கள் வரிசையில் நின்று மது வாங்கிசெல்கின்றனர். பெரும்பாலான மதுபான கடைகளில் அனைத்து வயதினரும் வாங்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க