• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 37 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை ?

May 6, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 37 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு
தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் பாதிக்கப்படும் நபர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2ம் தேதி வரை தமிழகத்தில் 711 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

கொரோனா நோயாளி பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டு வரப்படுகிறது. அந்த பகுதிகளில் வசிக்கும் நபர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

நகர்பகுதிகள் என்றால் அந்த தெரு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளுக்குள் வெளி நபர்கள் செல்வதை தடுக்கவும், யாரும் வெளியே செல்வதை தடுக்கவும் தடுப்பு வைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் 28 நாட்கள் வரை கட்டுப்பாடு இருக்கும்.மருத்துவ அதிகாரிகளால் அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும்.கடைசி நோயாளி வரை பரிசோதனையில் நெகட்டிவாக இருக்க வேண்டும். நோயாளி கண்டறியப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது. அதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தான் இருக்கும். தமிழகம் முழுவதும் தற்போது வரை 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 37 இடங்கள் ;

கோவை மாவட்டத்தில் 37 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி, கே.கே.புதூர், திருமறை நகர் 1, திருமறை நகர் 2,கருப்பராயன் கோவில் வீதி, ஆடிட்டர் வீதி, அம்மன் நகர், சாய் நகர், மதுக்கரை, போத்தனூர் 1,போத்தனூர் 2, வசந்தம் நகர், தியாகராய வீதி, அன்னூர், சிரியன் சர்ச் 1, சிரியன் சர்ச் 2, மேட்டுப்பாளையம், ராமச்சந்திரா ரோடு, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 1, ஜெயின் மஹோர் அப்பார்ட்மெண்ட் 2, கஸ்தூரி கார்டன், கோவை கார்டன், PN பாளையம், கிணத்துக்கடவு, சிறுமுகை, சாவித்திரி நகர், ரோஸ் கார்டன், பரத் நகர், மீனாட்சி நகர், அம்பேத்கர் காலனி, ஜீ.எம் நகர் 1, ஜீ.எம் நகர் 2, ஜீ.எம் நகர் 3, சிஎம்சிஹெச், சிடிஎம் ஹோம், காந்திபார்க் ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க