• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் மீன் மார்க்கெட் 45 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு !

May 5, 2020 தண்டோரா குழு

கோவையில்கடந்த 45 நாட்களாக மூடப்பட்டு இருந்த மொத்தம், மற்றும் சில்லரை விற்பனை மீன் மார்க்கட் சில விதிமுறைகளை பின்பற்றி இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கடுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.தற்போது மூன்றாம் கட்ட ஊராடங்கில் அரசு சில தளர்வுகள் அளித்துள்ளது.சிறு,குறு தொழில்கள் குறைந்த வேலையாட்களை பயன்படுத்தி தங்கள் தொழில்களை தொடர அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில், கோவை மொத்தம், மற்றும் சில்லரை மீன் விற்பனை கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் வியாபாரிகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தௌள்ளார்கள்.

இது குறித்து மீன்மார்கட் சங்கத்தின் பொருளாளர் சிராஜ் கூறுகையில்,

144 ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 45 நாட்களாக மீன் மார்க்கட் திறக்கவில்லை.தற்பொழுது அரசு சிலவழி முறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.அதன்படி தினமும் இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளியுடன் மீன் வாங்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றோம். தற்சமயம், தூத்துக்குடி போன்ற சில இடங்களில் இருந்து மட்டுமே மீன் வரத்து துவங்கியுள்ளது.அதனால் சற்று மீன்விலை அதிகமாக உள்ளது.மீன்வரத்து அதிகமாகும் பொழுது மீன் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க