• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மே 4க்கு பிறகு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் ?

May 2, 2020

தமிழகத்தில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 4 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடியது. இதில், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

பெருநகர சென்னை கவல்துறைக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்,

அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அவர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே வர வேண்டும்.

* ஐ.டி நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.
* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
* முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர மொபைல் போன் கடை, வீட்டு உபயோக கடை போன்ற தனிக் கடைகள் காலை 11 முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி.

தமிழகத்தில் பிற பகுதிகளில் உள்ள தளர்வுகள்;

* ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* தொழிற்பேட்டைகள், நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஹார்டுவேர் உற்பத்தி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி.
* கட்டுமான பணிகளுக்கு தேவையான விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை.
* மொபைல் போன் கடை, வீட்டு உபயோக கடை போன்ற தனிக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி.
* கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள், வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள் காலை 10 முதல் மாலை 5 வரை மாவட்ட கலெக்டர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.
* உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

தடை செய்யப்பட்டவை எவை?

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.

* திரையரங்குகள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், போன்ற இடங்களுக்கு தடை.
* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை.
* விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துக்கு தடை.
* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷாவிற்கு தடை.
* மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை.
* தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளுக்கு தடை.
* இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
— நோய் தொற்றை தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொற்று குறைய குறைய தமிழக அரசு, மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க