• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்

April 29, 2020 தண்டோரா குழு

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான்(54), சிகிச்சை பலன்இன்றி காலமானார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இர்பான் கான்.தேசிய விருது பெற்ற இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார்.ஆனாால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் வீடியோ கால் மூலம் தனது அம்மாவுக்கான மரியாதையை நடிகர் இர்ஃபான் கான்
செலுத்தினார்.

இதற்கிடையில்,கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் இர்பான் கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 53 வயதான இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புற்று நோய் காரணமாக அதிகமாக படங்களில் நடிக்காமலிருந்த அவர் பிரிட்டனில் சிகிச்சையிலிருக்கும் போது நடித்த ‘அங்க்ரேஸி மீடியம்’ திரைப்படம் ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியானது குறிப்பிடத்தக்கது. இவரது பல்வேறு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர்.

மேலும் படிக்க