April 28, 2020
தண்டோரா குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் 30 நாட்கள் ரூ.3 கோடிக்கு மேல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பால் நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு அமைப்பினர் உதவி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அவ்வமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உணவு கசாயம் வழங்கப்பட்ட நபர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 591 நபர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உணவு பொருட்கள் காய்கறி பருப்பு மளிகை பொருட்கள் 70 ஆயிரத்து 866 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் தற்போது வரை 3 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 592 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.