April 27, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்று 52 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா
பாதித்தோர் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியானது.இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 81 மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 809ஆக குறைந்தது.
இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:
மொத்த பாதிப்பு – 1,937
இன்று உறுதியானவர்கள் – 52
குணமடைந்தவர்கள் – 1,101
உயிரிழப்பு – 24
சிகிச்சை பெறுபவர்கள் – 809
மொத்த பரிசோதனைகள் – 94,781
இன்றைய பரிசோதனைகள் – 7,176
பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,312,
பெண்கள் – 625