April 27, 2020
தண்டோரா குழு
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவர் கிருபாசங்கர் மற்றும் குழுவினர்.கொரோனவை கண்டறியும் மென்பொருள் (சாப்ட்வேர்) மற்றும் மித்ரன் மொபைல் செயலியை (mobile app ) கண்டுப்பிடித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எக்ஸ்-கதிர்கள் மூலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சில வினாடிகளில் கண்டறிய ஒரு சிறந்த தீர்வு.செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட நபரின் நுரையீரலின் எக்ஸ்ரே கொடுக்கப்படும்.
மென்பொருள், ஒருவரின் எக்ஸ்-ரேவை பகுப்பாய்வு செய்து நோயின் தாக்கத்தை துல்லியமாக அறிந்துகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது.கொரோனா மற்றுமின்றி நிமோனியா,சார்ஸ் போன்ற வைரஸ் தொற்றுகளையும் பாக்டீரியா தொற்றுகளையும் கண்டறியும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக நாம் நேரத்தையும் பணத்தையும் குறைந்த அளவில் பயன்படுத்தி முழுநன்மை அடைய எதுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
மித்ரன் செயலி:
இன்று நம்மை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் சிறிய வினா எது தெரியுமா? கொரோனா இருக்கிறதா இல்லையா என்றே!! கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா? என தெரிந்துக்கொள்ள உதவுகிறது இந்த செயலி. இச் செயலியில் கொரோனவைப் பற்றிய புதிய தகவலும், புள்ளிவிவரமும் மற்றும் தடுப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அருகில் உள்ள மருத்துவ மனைகளையும்,மருத்துவ உதவியையும் அறிந்து கொள்ளமுடியும். இந்த செயலி மூலம் மளிகை மற்றும் உணவுப் பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.
கொரோனா பாதிக்காமல் இருக்க சமூக விலகல்,உடனடி தொடர்பு சோதனை , தனிப்பட்ட கண்காணிப்பு , சமூக உதவிக்கான இணைப்பு (online shopping ),மருத்துவ உதவி ( மருத்துவமனை மற்றும் மருந்தகம்) தொடர்பு சேவை போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் செயலி (mobile app ) மற்றும் வலை போர்டல் (web portal) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊரடங்கு காலத்தில் அரசுக்கு வருவாயும்,மக்களுக்கு அதியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நமது மித்ரன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.