April 27, 2020
தண்டோரா குழு
கோவையில் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சாரா சாமுவேல் தம்பதியின் மகன் ஜெகில் ட்ரிஸ் முதல் பிறந்தநாளை அக்கம் பக்கத்தினருடன் சமூக இடைவெளியுடன் நேற்று கொண்டாடினர்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்,அனைவருக்கு இனிப்பு வழங்கி கோவில் போன்ற திருத்தலங்கள் செல்வது வழக்கம்.ஆனால் கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதும் சாத்தியமில்லாம் போனது.ஆனால் தன்னுடைய மகனின் பிறந்தநாளை அக்கம் பக்கத்தினருடன் மொட்டை மாடியில் தீப ஒளியுடன் கேக்வெட்டி மகிழ்ந்தனர்.
மேலும் வீட்டை சுற்றியிருந்த 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டில் இருந்தபடியே கைத்தட்டி பிறந்தநாள் பாடல்பாடி சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு குறித்து வீடியோ பிடித்த நபர் சமூல வலைதளங்களில் வெளியீட்டுள்ளார்.தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவி வருவதும் சிறுவனுக்கு வாழ்த்துகளும் அனுப்பி வருகின்றனர். கொரொனா ஊரடங்கு என்பதால் எளிமையான முறையில் திருமணங்கள் ஒருபக்கம் நடந்தாலும் இதுபோன்று குழந்தைகளின் பிறந்தநாளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.