• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தாசில்தாரின் மனிதநேய செயல் !

April 27, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு
முதல்வர் பழனிச்சாமி முழு ஊரடங்கு உத்திரவிட்டார்.

கோவையில் இன்று முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டதால்மக்கள் யாரும் வெளியே வராததால் சாலைகள் வெறிசோடி காணப்பட்டன.இந்நிலையில்,பேரூர் சரக வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 4 மணியளவில்,தன் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார்.தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பேரூர் காவல்துறை செக்போஸ்ட் முன்பு ஐம்பது வயது கொண்ட ஒரு பெண்மணியும் அவரது கணவரும் அங்கு நின்று அழுது கொண்டிருந்தனர்.அவர்களிடம் என்னவென்று விசாரித்தார் தாசில்தார்.

அப்போது,அந்த பெண்மணியின் தாயார் கோவை ராஜவீதியில் உள்ள வீட்டில் தற்போது இறந்துவிட்டார்.இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற எங்களை இங்குள்ள போலீசார் அனுமதித்து விட்டனர்.ஆனால் சிட்டிக்குள் இருக்கும் போலீசார் எங்களையும், இரு சக்கர வாகனத்தையும் அனுமதிக்க மறுப்பதாக சொல்லி அழுதனர்.இதைக் கேட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் தன் ஜீப்பில் அவர்கள் இருவரையும் ஏற்றி,ராஜவீதியில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு விட்டு வருமாறு தன் ஒட்டுநரிடம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.மேலும்,தனது வாகனம் வரும் வரை ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க