April 27, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு இடர்படி வழங்கிவருகின்றது. கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி தூய்மைபணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்ரம் செய்ய வேண்டும் எனவும்,அரசு பணியாளர்களுக்கு இடர் படி வழங்கப்படுவதை போல தூய்மை பணியாளர்களுக்கும் இடர் படி வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.