April 26, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் இன்று 28 பேருக்கும், மதுரையில் 15, விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி
செய்ய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,020 ஆனது.
இன்று மட்டும் 60 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று உயிரிழப்பு; இதுவரை தமிழகத்தில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.