• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழு ஊராடங்கில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவங்கள் அரசுக்கு கோரிக்கை

April 26, 2020 தண்டோரா குழு

முழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி,ஹெரிடேஜ்,டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை, கோவை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.பால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், விற்பனை செய்ய கடைகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட உள்ளதால் பல இடங்களில் பால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கால்சியம், வைட்டமின் டி, புரதச்சத்து உள்ளிட்ட சத்து நிறைந்த பால் குழந்தைகளுக்கு மிக தேவையானது.இதனால், ஊரடங்கு காலத்தில் பாதுகாப்புடனும், கட்டுப்பாடுடனும் பால் விற்பனை செய்ய இரண்டு மணி நேரம் அனுமதி அளிக்குமாறு மாநில அரசுக்கு தனியார் பால் நிறுவனங்கள்கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க