April 25, 2020
தண்டோரா குழு
குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்தி வரும்கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே சுற்றி திரிபவர்கள் மீறி காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கோவையில் அன்னூர் காவல் நிலைய பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 போலீசாருக்கும், ஒரு ஆயுதப் படைக் காவலருக்கும், குனியமுத்தூர் காவல் நிலைய காவலருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தப் பட்டுள்ளது.மேலும்,தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சில நாட்களுக்கு இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.அந்த காவல் நிலையம் குனியமுத்தூர் குமரன் மஹாலில் செயல்படுகின்றது.நேற்று போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில் இன்று குனியமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.